துருக்கியின் தலைநகர் அங்காராவில் இஹ்வான்களின் சர்வதேசப் பேரவையின் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஆயிரக் கணக்கான துருக்கியா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அறபு இஸ்லாமிய உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் இஹ்வான் அறிஞா்கள் இஸலாமியவாதிகள் கல்வியலாளர்கள் என்று பெரும் எண்ணிக்கையானோர் பங்கு பற்றுகின்றனா்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் தஃவாப் பகுதிப் பொறுப்பாளா் அப்துல் காலிக் ஷரீ்ப், ஜோர்தான் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் கண்கானிப்பாளா் கலாநிதி ஹமாம் சயீத், சிரிய இஹ்வான்களின் கண்கானிப்பாளா் றியாழ் ஸக்பா, ஷெய்க் முனீர் கழ்பான் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு உறுப்பினா் இப்றாஹீம் கவ்ஸா பிரபல ஆளுமைகள் இதில் பங்கு கொள்கின்றா்.
இரு தினங்களாக நடைபெறும் இம் மாநாட்டில் இமாம் ஹஸனுல் பன்னா குறித்தும் ஜமாஅதுல் இஹ்வானுல் அமைப்பு குறித்தும் உரையாடுக்கின்ற பல்வேறு அமா்வுகள் இடம்பெறுகின்றன.
No comments:
Post a Comment