Thursday, May 03, 2012

ஓய்வு வேளைகளில் நற்பணியாற்றுவது.

சகோதர !! சகோதிரிகளே !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு 

ஓய்வு வேளைகளில் நற்பணியாற்றுவது.
 
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் -எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (அல்குர்ஆன் 7:10)

நமக்குக் கிடைத்திருக்கும் ஓய்வுநேரங்களை அல்லாஹ்வுக்கு விருப்பமான மற்றும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளில் பயன்படுத்தி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.
குர்ஆன் ஓதுதல் மற்றும் மனனம் செய்தல், உபரியான வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
அழைப்புப்பணியை மேற்கொள்ளுதல்,
இறை நினைவுகளில் திக்ர் செய்தல் (பிரார்த்தனை செய்தல்)

சமூகப்பணி செய்தல்.

( அல்அஃராப் 7:34),(யூனுஸ்10:49) அந்நஹலு 16:61
மரணவேளை வந்துவிட்டால் மலக்குகள் மனித உயிரை ஒருகணம் முந்தவோ பிந்தவோ காலம் தாழ்த்தாமல் அவனுக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் அவன் உயிரை கனகச்சிதமாக பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அந்த நிலை நமக்கு வரும்முன் மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த அரிய நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இன்றே ஆயத்தமாகுவோம். திசை தெரியாத பயணத்தை மேற்கொள்வது போல நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மறுமையில் வெற்றியடையக் கூடிய வழிகளறிந்து அதன்படி நடந்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் பாக்கியத்தை நமக்கு நல்கிட அவனே போதுமானவன்.

காலம் கண்போன்றது நேரம் பொன் போன்றது என்பார்கள். ஆனால் அந்தபொன்னைவிட,முத்துக்கள் பவளங்களை விட ஏன் வைரக்கற்களைவிடவும் விலையுயர்ந்தது.

விலைமதிப்பற்ற நேரம் சென்று விட்டால் மீண்டும் திரும்பி வராது: திருமறை குர்ஆன் இரு நிலைகளைக் குறிப்பிடுகிறது.

முதல் நிலை.

உலகில் இருக்கும் காலத்தைத் தவறவிடுவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.மரணவேளையில், எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கிடைத்தால் இழந்த காலத்தை ஈடு செய்து தவறவிட்ட நன்மைகளை யெல்லாம் நிறைவேற்றி வருவேனே என்று மனிதன் துடிதுடித்து
அங்கலாய்க்கும் நிலையை அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுகிறான். (முனாபிகூன் 9,10)

அடுத்த நிலை.

மறுமையில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உலகில் செய்த
செயல்களுக்கெல்லாம் நீதி வழங்கி கூலி கொடுக்கப்படும் போது நல்வவர்கள்சுவர்க்கத்திற்கும், தீயவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். அந்த வேளையில்நரகவாசிகள் வேண்டுவர்களாம். இந்த உலகிற்கு மீண்டும் ஒரு முறை அனுப்பப்பட்டால்நாங்கள் புதியதோர் வாழ்க்கை வாழ்ந்து நல்ல அமல்கள் செய்து வருவோமே என்று கதறுவர்களாம்.
அப்போது அவர்களிடம் கூறப்படும்.

‘வேலை செய்யும் காலம் முடிந்து விட்டது.இப்போது கூலிவழங்கும் நேரம் வந்து விட்டது.


இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (35:37)

(அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வரவில்லையா? ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள். ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்றுகூறுவான்).

No comments:

Post a Comment