
நாட்டின் எம்.பி.,க்கே இந்த கதி என்றால்....
தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள் அனைவரும் வலியுறுத்தினர்.
மோடியே காரணம்.
ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ் பேசியதும், எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அவையில் அமளி காணப்பட்டது.
காவி சமாதானப் புறா..!? சுஷ்மா சுவராஜ், "இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு, இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் ஆதிவாசி எம்.பி.,க்கு அது போன்ற அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையை அவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.
அதற்கு குருதாஸ் தாஸ் குப்தா, "ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இப்பிரச்னையை அனுப்பினால் காலம் கடத்துவர். ஆகவே, இப்பிரச்னை குறித்து அவையே முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.கிரிஜா வியாஸ் பேசும்போது, அருகில் இருந்த பிரதீபா கண்ணீர் விட்டபடி அழுது கொண்டும், தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை காட்டியபடியும் இருந்தார். இதனால், அவையில் பரபரப்பு காணப்பட்டது. எம்.பி.,க்கள் பலரும் உணர்ச்சிபூர்வமாகக் காணப்பட்டனர்.
படம்: இஷ்ரத் ஜஹான் மற்றும் அவரது உறவினர்களை போலி என்கௌண்டரில் நரேந்திர"பேடி" படுகொலை செய்த காட்சி
No comments:
Post a Comment