குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அங்கு மாடுகளை பலியிடுவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளபட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2011 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்து பள்ளியையும் மதரசாவையும் மூடுமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது . குறித்த மஸ்ஜித் ,மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் மதரஸாவாக சட்ட அனுமதியுடன் இயங்கிவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
படங்கள்: நோலேச் பொக்ஸ்,முஹம்மத் அம்ஹர்:
Thanks - Lanka Muslim
No comments:
Post a Comment