Wednesday, August 29, 2012

யூத இராணுவம் இமாமத் செய்த பலஸ்தீனர்களின் ஈத் தொழுகை - தெரியாத உண்மைகள் (வீடியோ கிளிப்)



Abu Sayyaf     த் பெருநாள். உலகம் முழுவதும் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டதை நாம் கண்டுள்ளோம். இஸ்லாம் உலகில் வளர்ந்துள்ளதையிட்டு உவகை கொண்டுள்ளோம். ஆனால் பலஸ்தீன சகோதரர்கள் எவ்வளவு சிரமங்களிற்கு மத்தியில் ரமழானை கழித்தார்கள். அவர்கள் பெருநாள் தொழுகையினை நிறைவேற்ற முகங்கொடுத்த பிரச்சனைகள் தான் எத்தனை. இது எம்மில் எத்தனை பேரிற்கு தெரியும்?
குடும்பத்தில் சிலரை தடுத்து வைத்து சிலரை தொழ அனுமதித்த யூத இராணுவம், பள்ளியினுள் செல்ல விடாது வீதியில் தொழவைத்த யூத இராணுவம், தொழுகையில் சஜ்தா செய்த வேளை கண்ணீர் புகை குண்டுகளை வீசிய யூத இராணுவம், டீன் ஏஜ் சிறுவர்களை வெயிளில் தடுத்து வைத்து மற்றவர்களை தொழ அனுமதித்த யூத இராணுவம், அடையாள அட்டை எடுத்துவராதவர்களை திருப்பியனுப்பிய யூத இராணுவம், எல்லாவற்றிற்கும் மேலாக தொழ அனுமதித்த இளைஞர்களை தொழுது முடித்து சந்தோஷமாக மஸ்ஜிதை விட்டு இறங்கியவுடன் தேடப்படும் தீவிரவாதிகள் என கைது செய்த யூத இராணுவம்.. இப்படி எத்தனை அவலங்கள் அந்த பலஸ்தீன சகோதரர்களிற்கு. இதையும் தாண்டித்தான் அவர்களின் ஈத்துல் பித்ர் பெருநாள் தொழுகை. இவர்களுடன் எமது பெருநாளை சற்று நினைத்து பாருங்கள்...  அல்லாஹ்விற்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். அந்த பலஸ்தீன சகோதர சகோதரிகளிற்கான கண்ணீருடன் இந்த காணொளியை பாருங்கள்....

No comments:

Post a Comment