07 பங்குனி 2011ல் நொச்சியாகம (அநுராதபுரம்) வீதியில் வைத்து பாராளுமன்றத்திற்கு செல்வதற்காக பயணித்த போது வெள்ளை வேனில் வந்தவர்களால் துப்பாக்கி மற்றும் கிரனைட் தாக்குதலிற்கு உட்டபட்டது இவரது வாகனம். இவருடன் உடன் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் திருப்பி தாக்கியதில் மயிரிழையில் உயிர் பிழைத்தவர். பின்னர் இந்த தாக்குதல் தொடர்பில் ஈ.பி.டீ.பி. அமைப்பை குற்றம் சுமத்தி செய்திகள் வெளியாகின. அவர்கள் அதனை மறுத்து விட்டனர்.
இதையெல்லாம் நாம் ஏன் எழுத வேண்டும். இந்த ஸ்ரீதரன் கடந்த ஜீலை மாத ஆரம்ப வாரத்தில் கனடா சுற்று பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் Tamil Biz Canada (Torondo) வில் வைத்து ஓர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சில கருத்துக்களை சொல்லியுள்ளார். அதில் அவர் “நான் மூன்று ஜே க்களை சிறந்தவர்களாக கருதுகிறேன். ஒன்று ஜப்பானியர்கள். இரண்டு ஜுவ்கள். மூன்று ஜப்னாகாரர்கள்” என குறிப்பிட்டார். “ தான் நேசிக்கும் இனம் யூதர்கள் எனவும் வெறுக்கும் இனம் முஸ்லிம்கள்” என்றும் குறிப்பிட்டார். ஆனால் ஏன் முஸ்லிம்களை வெறுக்கிறேன் என்பதற்கான காரணங்களை கூறவில்லை. பிரபாகரன் அல்லது தீபன் முஸ்லிம்களை வெறுத்ததனால் இவரும் வெறுக்கிறாரா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவது சகஜமே.
உலகில் மிகவும் கல்வி அறிவுடையவர்கள் யூதர்கள். இலங்கையில் தமிழர்கள்.
உலகில் வட்டி தொழிலை அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்கள். இலங்கையில் தமிழர்கள்
உலகில் மஸ்ஜிதுனுல் படுகொலை புரிந்தவர்கள் யூதர்கள்.(ஹெப்ரோன்). இலங்கையில் தமிழர்கள். (காத்தான்குடி மீரா பள்ளிவாசல்)
உலகில் ஒரு இனத்தை பூண்டோடு புலம்பெயர வைத்தவர்கள் யூதர்கள். (பலஸ்தீன்). இலங்கையில் தமிழர்கள் (வடக்கு முஸ்லிம்களை)
உலகில் எங்கும் பரவி வாழ்ந்து தங்கள் இலக்கிற்காக உழைப்பவர்கள் யூதர்கள் (இஸ்ரேல்). இலங்கையில் தமிழர்கள் (ஈழம்)
ஸ்ரீதரன் சொல்வது போல் அவரிற்கு யூதர்களை பிடித்து போனதில் எந்த வியப்புமில்லை. ஏனென்றால் மேற்சொன்ன உதாரணங்கள் மூலம் அது இயல்பானதென்பது புரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் பற்றி அவர் பேசியதன் அர்த்தம் என்ன என்பதே கேள்வி.
முஸ்லிம்களை ஸ்ரீதரன் வெறுப்பான இனமாக பார்ப்பது பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள். தமிழர்களிற்கு உள்ள அதே உரிமை முஸ்லிம்களிற்கும் வடக்கு கிழக்கில் உண்டு. நாங்கள் ஒன்றும் “இஸ்லாமிய தமிழர்கள் அல்ல”. மாறாக சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கம். எங்கள் வாழ்தல், இருப்பு, பொருளீட்டல், மரணம் எல்லாமே வடக்கு கிழக்கிலேயே இருக்கும். அதனை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
தமிழர்களிற்கு வேண்டுமானால் எஸ்.ஜே.செல்வநாயகம் “தந்தை செல்வாவாக” இருக்கலாம். சு.ப.தமிழ் செல்வன் “சித்தப்பாவாக” இருக்கலாம். அதை பற்றி எமக்கு கவலையில்லை. ஆனால் இந்த சித்தப்பா, பெரியப்பா உறவுகளை அவர்கள் நாங்களும் உள்வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களானால் அது வெறும் கனவாகவே முடியும்.
பொங்கள் வாங்கி, சுண்டல் தின்று முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் அரசியல் செய்த காலம் மலையேறி விட்டது. இது இன்றைய குழந்தைக்கும் தெரியும். ஆனால் புலிகளின் கட்டளை தளபதியின் மச்சானிற்கு புரியாமல் போனது தான் விவகாரமே. “புலி செத்துப்போனாலும் புலித்தோலும், புலிபல்லும் செத்து போகாது” என்பார்கள். இதில் ஸ்ரீதரன் புலி பல்லா? புலி தோலா?......................
intha article....sritharanin thanippatta karuththe thavira tamilarkalin karuththu alla. enave.. ivarukkaha ottu moththa tamilarkalaiyum yootharkalodu oppituvathu...avvalavu nallathalla enpathu en karuththu....
ReplyDelete