Saturday, September 08, 2012

யாழ் முஸ்லி்ம்களின் தலைமைத்துவம் - சுவரில்லாத சித்திரங்கள்



பல விடயங்களில் கூட்டாக முடிவெடுத்து இயங்கிய இவர்கள் இப்போது தனியாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.......................


அவரவர் கோணத்தில் அவரவர் நியாயங்கள் பிரதானமானவை. அதில் இருப்பது சமூக அக்கறையா? அல்லது சில நோக்கங்களை கொண்ட காய் நகர்த்தலா என்பதனை சம்மந்தமுடையவர்களே அறிவர். இந்த விவகாரத்தில் குறை கூறி ஒரு தரப்பை எதிர்த்து இன்னொரு தரப்பை ஆதரிப்பதனால் எந்த பலனும் வந்து விடப்போவதில்லை.  நாம் மனதில் வைக்க வேண்டிய விடயம், எமது சில பிடிவாதங்களால், எமது சில தந்திரங்களால், எமது சில பின்வாங்கள்களால் பாதிப்படையப்போவது யாழ் முஸ்லிம் சமூகமே.

நாம் நமக்குள் முரண்படும் பொழுதுகளில் நம்மை ஒடுக்கும் சக்திகள் தங்களிற்குள் உடன்படும் விடியல்களாக அவற்றை ஆக்கி கொண்டுள்ளன.
சிலுவை சுமக்கப்பட்டு ஒஸ்மானியாவின் முன் நிறுத்தப்பட்டு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு தாமதித்து தனது பவனியை தொடர்ந்துள்ளது. சோனக தெருவினுள் கலாச்சார தாக்கங்களும், மாற்றங்களும் வெகுவாக வரவிருக்கும் வரலாற்றில் நாம் நிற்கிறோம்.

இணை வைப்பு ,வட்டி, போதைபொருள் பாவனையும் விற்பனையும், மது பழக்க வழக்கங்கள், விபச்சாரங்கள், என சமூக அவலங்கள் நிரம்பிய ஒரு சமூகத்தை வழிநடாத்த வேண்டிய தார்மீக பொருப்பை சுமந்தவர்கள் நாங்கள். நம் சமூகத்திற்கான தீர்வுகளை வழங்குவோம் என வெளிப்படுத்தியதன் விளைவாகவே மக்கள் மீள குடியேறியுள்ளனர். அந்த நம்பிக்கைகளிற்கு உண்மையாளர்களாக நாம் நிற்க வேண்டும். நாம் இவ்வாறு முரண்படுவதனால் பாதிக்கப்படுவது நம் சமூகம்.


நமது முரண்பாடுகளிற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் நம் சமூகத்தின் ஒரு கடைநிலை மனிதன் அதனை நம் நியாயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப் போவதில்லை. மாறாக நம் தலைமை மீது இருந்த நம்பிக்கை அவனிடம் அற்று போகிறது. சொந்த மூளையின் கட்டளை பிரகாரம் இயங்க ஆரம்பிப்பான். ஏனைய பிரதேச தலைமைகளை நாட முற்படுவான். இதன் விளைவாக பாரிச சமுதாய அச்சுறுத்தல்கள் உருவாக ஏதுவான வாய்ப்புக்கள் உண்டு.

எமது பிளவுகளும், பின்னடைவுகளும் எம்மை நம் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது ஒரு புறமிருக்க, சோனக தெருவை சட்டரீதியாக ஆக்கிரமிக்க துடிக்கும் மனிதர்கள் இதனை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்வார்கள். நம் சமூகம் நம் முகவரிகளை மீண்டும் இழக்க நேரிடும். இந்த நிகழ்வுகளிற்கும் நாம் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும். நாளைய நிலைமை கடுமையானது. நமக்கு உதவ யாரும் வரப்போவதில்லை. எம் கரங்களாலும், நாவுகளாலும் செய்ததை வைத்தே நமக்கான தீர்ப்புக்கள் வாசிக்கப்படும். அந்த வகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை கையாண்ட விதம் குறித்து நாம் விசாரிக்கப்படுவோம். ஒரு பொருப்பான வேலையை அதன் பாரம் அறியாமல் நாம் நம் புத்தியின் ஊடாக கையாள முனைகிறோம்.
Thanks:jaffnamuslimbase

No comments:

Post a Comment