விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கியூ பிரிவு பொலிஸாரால் திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று (23) நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பில் நின்ற கியூ பிரிவு பொலிஸாருக்கு வன்னியரசை கைது செய்யுமாறு உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தது. இதனால் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வன்னியரசை கைது செய்ய பொலிஸார் திட்டமிட்டனர்.
ஆனால் வைகோ, சீமான் உள்ளிட்டோரை பொலிஸ் கைது செய்யும் முன்பாகவே வன்னியரசு காரில் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற கியூ பிரிவு பொலிஸார் விருதுநகர் அருகே மடக்கிக் கைது செய்தனர்.
திருநெல்வேலிக்கு இன்று (24) காலை கொண்டுவரப்பட்டார். வன்னியரசு மீது இலங்கைக்கு ஆயுதம் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சதீஷ்குமார் கைது
இதேபோல் நெல்லை போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக எழுச்சிப் பேரவை என்ற அமைப்பின் சதீஷ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, வன்னியரசுவை விடுதலை செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது கட்டவிழ்த்துள்ள அடக்குமுறையை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment