Wednesday, March 07, 2012

புலிப்பயங்கரவாதத்திற்கு எதிரான யாழ் முஸ்லிம்களின் போர் பிரகடனம்



1990.10.30 - யாழ்ப்பாண முஸ்லிம்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். விடுதலை என்ற பெயரில் செயற்பட்ட தமிழ் பயங்கரவாதம் யாழ் முஸ்லிம்களை குதறியெடுத்த நாள். பல தலைமுறைகளிற்கு எண்ணி துடிக்கும் வேதனை மிக்க நாள். இதையெழுதும் இந்த நிமிடம் வரை அதன் பதிப்பால் கஷ்டப்படும் குடும்பங்கள் பல ஆயிரம்.
புலிப்பயங்கரவாதிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், போலியான அரசியல் காரணங்களையும் கூறி முஸ்லிம்களை துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும், சிங்கள பேரினவாதத்தின் போராயுதம் என்றும் பச்சைகுத்தி வெளியேற்றிய துயரம் மிக்க நாளே 30.10.1990.

புலிகள் இயக்க பயங்கரவாதத்தின் பின்னாள் நின்று தொழிற்பட்டது தமிழ் தேசிய இனவாதம். முஸ்லிம்கள் மீதான குரோத உணர்வுகளையும், காழ்ப்புணற்சிகளையும் கொண்ட உயர்மட்ட இனவாதிகளால் புலிகளிற்கு வழங்கப்பட்ட தொடரான உபதேசங்களே, ஈழ விடுதலை என்ற பெயரில் முஸ்லிம்களை சின்னாபின்னப்படுத்தியது. இரண்டு மணித்தியாலத்தில் அகப்பட்ட முஸ்லிம்கள்  பலர் இன்னும் உயிர் வாழும் சாட்சியங்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


பிர்அவ்ன் முதல் பிரபாகரன் வரை இறைவன் கேவலமான சாவையே தீர்ப்பாக இவர்களிற்கு விதித்துள்ளான். உலக வரலாற்றில் பாசிஸ்ட்கள் எல்லோரும் இவ்வாறு தான் செத்து தொலைந்தார்கள். நாம் அறிந்த வரலாற்றிலும், வாழும் வரலாற்றிலும் இது தான் நிகழ்ந்தது. ஹிட்லர், முலோலினி வரிசையில் கடைசியாக அழிந்த பாசிஸ்ட் பிரபாகரன். கடைசியாக அழிந்த இயக்கம் புலிகள்.

பிராகரனிற்கு உபதேசம் புரிந்தவர்களில் ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. பின்னாட்களில் தன்னை முஸ்லிம் அபிமானியாக காட்டிக் கொண்டவர். இதை நம்பிய எம் முஸ்லிம் அமைப்புக்கள் அவர் மறைவிற்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தின. இன்று சிவத்தம்பியும் இல்லை. பிரபாகரனும் இல்லை. ஆனால் பிரபாகரன் எனும் பாசிஸ்டின் கட்டளையை ஏற்று அதை அமுல்படுத்திய கொடியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். 

அந்த வகையில் தமிழீழ விடுதலை (?) புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் அரசியல் பொருப்பாளன் ஆஞ்சனேயர் பின்னாட்களில் இவன் வன்னியில் துனை அரசியல் தலைவர்களில் ஒருவனாக இளம்பரிதி என்ற பெயரில் செயற்பட்டவன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றான். இவனே யாழ்ப்பாண முஸ்லிம்களை பலாத்காரமாக ஆயுத முனையில் வெறித்தனமாக வெளியேற்றியவன். இவன் ஸ்ரீ லங்கா அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இன்னொருவன் கரிகாலன். கிழக்கு மாகான அரசியல் பொருப்பாளன். முஸ்லிம்கள் மீது தீராத இனவெறி கொண்டவன். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீதான பல ஆயுதரீதியாக செயற்படுத்தப்பட்ட அநியாயங்களிற்கு பின்னணியில் நின்று செயற்பட்டவன். இவனும் இளம்பரிதி எனும் ஆஞ்சனேயனுடன் யாழ் சோனக தெருவில் பிரசன்னமாகியிருந்தான். முஸ்லிம்களை மூர்க்கத்தனமாக வெளியேற்றியவன். உயிர் அச்சுறுத்தல் விடுத்தவன்.

இந்த இரண்டு அரசியல் என்ற போர்வையில் சீருடை அணியாத புலிப்பயங்கரவாதிகளுமே யாழ்ப்பாண முஸ்லிம்களை யாழ் மாவட்டத்தில் இருந்தும் வட மாகாணத்தில் இருந்தும் இரண்டு மணி நேர காலக்கெடுவுள் பலாத்காரமாக வெளியேற்றிய புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளாக செயற்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இன்று அரச தடுப்பு காவலில் இருக்கின்றனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான - ஆட்கடத்தல், ஆட்கொலை, கப்பம் கோரியமை, சொத்துக்களை கொள்ளையடித்தமை, சொத்துக்களை களவாடியமை, உரிமையுள்ள வாழ்விடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றியமை, ஆயுத முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை, யாழ் சோனக தெரு வட்டார அரச உடமைகளை சேதம் பண்ணியமை, வணக்கஸ்தலங்களான மஸ்ஜித்களினுள் அத்துமீறி நுழைந்து அதை கேவலமான முறையில் அசிங்கப்படுத்தியமை, சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மீது வன்முறையை மேற்கொண்டமை போன்ற பல இன்னொரன்ன கிரிமினல் குற்றச்சாட்டுக்களுடன் சம்மந்தப்பட்ட நொட்டோரியஸ் கிரிமினல்கள்.

இவர்கள் மீது இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் சட்ட எல்லைக்குள் நின்று சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏன் நம்மால் முடியவில்லை. புலிகளை ஏசுகிறோம். பாசிஸ்ட் என்கிறோம். பயங்கரவாதிகள் என்கிறோம். திட்டி தீர்க்கிறோம். ஆனால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சந்தர்ப்பங்கள் உள்ள போதும் தயங்குகிறோம்.

  எம் சமூகத்தில் சட்டம் படித்த இரண்டு சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளுடன் சம்மந்தப்பட்டவர்கள். தேவையற்ற எத்தனையோ விவகாரங்களில் ஈடுபடும் இவர்களால் தேவையான இந்த விவகாரத்தில் வழக்காட தயங்குவது ஏன். உயிர் பயமா? புலிப்பயமா? இல்லை யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்ய முடியாது போகும் என்ற பயமா? அல்லது இவற்றையெல்லாம் தாண்டி தமிழர்களிற்கும், தமிழ் இனவாதிகளிற்கும், ஈழம் எடுப்போம் என்ற கனவில் செயற்படும் ஈழவாதிகளிற்கும் தாங்கள் தவறானவர்களாகி விடுவோம் என்ற விசுவாச உணர்ச்சியா? புரியவில்லை எமக்கு.

2003ல் இதே யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றிய ஆஞ்சநேயரை (இளம்பரிதி) மீலாத் விழா மேடையை ஐந்து சந்தியில் அமைத்து பிரதம விருந்தினராக அழைத்து வந்து உபசாரம் செய்த அடிமுட்டாள்களையும், சுயநல வியாபாரிகளையும் இன்னும் நாம் நம்முள்ளே தலைவர்களாக கொண்டுள்ளோம். யாழ்ப்பாணட் புதுப்பள்ளிவாசல் மஸ்ஜிதுனுள் இதே ஆஞ்சனேயரை உள்அழைத்தவர்களும் இவர்களே். உலக வரலாற்றில் சில இடங்களில் தான் இவ்வாறான கேவலமான சம்பவங்களம் வெங்கம்கெட்ட மனிதர்களும் இருந்துள்ளார்கள். நம்மை சீரழித்த. நம் சமுதாயத்ததை கருவருத்த புலிப்பயங்கரவாதிகளின் அரசியல் பொருப்பாளரை அல்லாஹ்வின் மஸ்ஜித்தில் கொண்டு வந்து இருத்திய பாவிகளை உள்வாங்கிய சமுதாயமல்லாவா நாம். 

முன்பொரு முறை மீலாத் மேடையில் புலிப்பொருப்பாளனை கொண்டு வந்து இருத்தி சர்பத் கொடுத்து மகிழ்ந்த அதே கும்பல் மீண்டும் 2012 மீலாத் மேடையில் அஸீம் மாஸ்டரை (யாழ் அஸீம்) ஏற்றி எம்மை வெளியேற்றியதற்கு எதிராக கவிதை பாடவைத்து எம் சமூகத்தை மொத்தமாக எமாற்றுகிறது. நாமும் ஏமாறுகிறோம். அவர் கவிதையை ரசித்து கேட்கிறோம். அவர்கள் தரும் சர்பத்தை ருசித்து குடிக்கின்றோம். வெல்டன். டிரிங் வன் மோர் கிளாஸ் ஒப் சர்பத்.

நாம் இங்கே யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் மனசாட்சியே உங்களிற்கு நீதிபதி. இங்கு நாம் யாருக்கும் சார்பாகவும் இதை எழுதவில்லை. இதை வாசிக்கும் போது பலரை தாக்கி சிலரை மீதம் வைத்துள்ளது போல தோன்றினால் அதற்கு நாம் ஜவாப்ததாரிகள் இல்லை.  இந்த கும்பல்கள் மட்டுமல்ல இன்னும் இருக்கிறார்கள். ஒரு சாம்பிளிற்கு இதோ...

ஒரு மார்க்கம் கற்றவர் (?). சமூக சேவகராக, அரசியல்வாதியாக, பிரச்சார தாயியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டவர். புலிவால் பிடித்தவர். இவர் பிடித்த புலிவாலை இவர் தோழரும் (அவரும் மார்க்கம் கற்றவர் (?))பிடிக்க போய் புத்தளத்தில் காணமல் போனார். புலிகளுடனும், சுனா.பானா.வுடனும் அரசியல் பேச்சுவார்த்தை என்று பம்மாத்து காட்டிய இறுதியில், நமக்கான தனித்துவ அரசியல் கட்சி என்று சமூகத்திற்கு பெரிய அல்வா கொடுத்துப் பார்த்தார். சமூகம் விரும்பி உண்ணவில்லை. இறுதியில் இவர் டக்ளஸ் தேவானந்தாவின் தோழராகி விட்டார். இவர் ஒரு சாம்பிள் மட்டுமே.

இந்த மீலாத் விழாவிற்கு செலவழித்த தொகை இரண்டு மில்லியன்கள். இருபது இலட்சங்கள். சோறு திங்கவும் சோக்குப் பாக்கவும் செலவழித்த இந்த பணத்தை ஏன் சமூக நலன்களிற்கு பயன் படுத்த முடியாது?

யாழ்ப்பாண முஸ்லிம்களே!, தனவந்தர்களே!, புலம்பெயர் சகோதர சகோதரிகளே!, புத்திஜீவிகளே!, சமூக ஆர்வரலர்களே, இளைஞர்களே!, யுவதிகளே!...... சற்று சிந்தியுங்கள். வெறும் உளரீதியான அற்ப சந்தோஷங்களிற்காக உங்கள் பணங்களை தெரிந்து கொண்டே இவர்களிற்கு அளித்தீர்கள். ஆதரித்தீர்கள். அரவணைத்தீர்கள். இறுதியில் கூட்டம் கூட்டமாக சென்று சோனக தெருவை ஒரு கலக்கு கலக்கினீர்கள். சந்தோஷம். ஆனால் நம் சமூகத்தையே சீரழித்த கொடிய புலிப்பயங்கரவாதிகள் இன்னும் இருக்கிறார்கள். நம் வெளியேற்றத்தில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள். இவர்களை என்ன செய்யப்போகிறீர்கள். தண்டிக்க இது நல்ல தருணம். 

இன்று இருப்பவர் ஒரு முஸ்லிம் நீதியமைச்சர். அதுவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் கட்சி சார்ந்த கிளையின் யாழ்ப்பாண அமைப்பாளரும் செயற்படுகிறார். இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். பிரபாகரனுடன் சுண்டல் காகிதத்தில் ஒரு நிமிட ஒப்பந்தம் போட்டவராக அவர் இருக்கலாம். ஆனால் அவர் இப்போது நீதியமைச்சர். நேற்றும் கூட யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை நான் மறக்கவில்லை என பேட்டியளித்தவர்.

ஆனால் எமக்கு தெரியும் இந்த கருத்தை நக்கலாக விமர்சிப்பீர்கள். நையாண்டி பண்ணுவீர்கள். இதையெல்லாம் உங்களை செய்ய வைப்பது புலிகள் மீதான பயம். அப்படி என்றால் நீங்கள் தொடை நடுங்கிகள்.  
மீலாத் விழாவிற்கு 20,000 ரூாபா கொடுத்த நீங்கள் இவர்களிற்கு எதிராக வழக்காட முன்வரும் குழுவிற்கு வெறும் 100 ரூபா கொடுப்பீர்களா என்பது சந்தேகமே.

நாம் அடிக்கடி சொல்வோம். ஏன் சந்தோஷம் கூட படுவோம். இலங்கையின் மற்றைய ஊர்களை பார்க்கவும் யாழ் சோனக தெரு திறமானது. நாம் சிறந்தவர்கள். சம்திங் ஸ்பெஷல் என்று. அந்த ஸம்திங் ஸ்பெஷல் என்ன தெரியுமா.........சுயநலம், பயம், அச்சம், சந்தர்ப்பவாதம் மொத்தமாக சொன்னால் “பொன்னைதனம்”

No comments:

Post a Comment